முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சுகாதாரத் திட்டப் பணிகள்உலக வங்கி நிதியுடன் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      தமிழகம்
Ma Subramanian 2021 11 16

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் உலக வங்கி நிதியுடன் மேற்கொள்ளப்படும் சுகாதாரத் திட்டப் பணிகள் குறித்த மறு ஆய்வுக் கூட்டம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டப் பணிகளைப் படிப்படியாகச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் பல்வேறு சுகாதாரப் பணிகளுக்காகத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரூ.2,757 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களை உலக வங்கியுடன் இணைந்து செயல்படுத்துவற்கான திட்ட இடைக்கால மறு ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், உலக வங்கியைச் சேர்ந்த ரிப்பாட் அசன், ராகுல் பாண்டே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சுகாதாரத் திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் செலவினம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து