முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எந்தவொரு புதிய அணையையும் கேரளா, கர்நாடகாவில் கட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மேட்டூர் : தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும்  எந்தவொரு புதிய அணையையும் கேரளா, கர்நாடகாவில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41வது ஆண்டாக நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 13ம் தேதி இரவு 11.35 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இதையடுத்து 16 கண் மதகு, அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் நேற்று காலை மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் திட்டம் செயல்படுத்த கடந்த அ.தி.மு.க அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து நிறைவேற்றுவோம். முதல் கட்டமாக 4 ஏரிகளுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவுப் படுத்தப்படும். கேரளா, கர்நாடகத்தில் தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எந்தவொரு புதிய அணையையும் கட்ட அனுமதிக்க மாட்டோம். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து