முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது நிம்மதி அளிக்கிறது: டிடிவி தினகரன் கருத்து

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது என்று அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த்தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. 

இதற்காக ஒராண்டு காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மேலும் தமிழக விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன்,ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்  திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் டுவிட்டரில்  தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து