முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவர்களின் நலன் காக்க செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

கல்லூரி மாணவர்கள் நலனைக் காக்கும் வகையில் வரவுள்ள செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக உயர்கல்வி மாணவர்களின் கோரிக்கையான செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்பதைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இப்போது பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுப் பாடம் கற்பிக்கப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், உயர் கல்வித்துறை, செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இந்த முறை செமஸ்டர் தேர்வை ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே தமிழக அரசு, செமஸ்டர் தொடர்பாக வெளியிட்ட நேரடித் தேர்வுக்கான அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறவும் நல்ல முடிவு எடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும். இவ்வாறு அதில் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து