முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா உணவகத்தில் கருணாநிதி புகைப்படம்: விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை வைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கிடையாது. திமுகவினர் இந்த் படத்தை வைத்துள்ளனர் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. காலை இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் கறிவேப்பிலை சாதம் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அம்மா உணவகம் திமுக ஆட்சி அமைந்தும் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார்.

மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.  இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில்  2015 மே 24 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. அம்மா உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன. 

இந்நிலையில், இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவிக்கையில்,  அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை திமுக கட்சி பிரமுகர்கள் வைத்துள்ளார்கள். கருணாநிதி படத்தை வைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எங்களுக்கு தகவல் இல்லை. உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து