எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கடலூர் : தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கடலூரில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதனையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுதவிர வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆல்பேட்டை அருகே தென்பெண்ணையாறு கடலில் கலக்குகிறது.
இந்த ஆறுக்கு கர்நாடக மாநிலத்தில் திறக்கப்படும் உபரிநீர், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சாத்தனூர் அணையில் சேருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் வரத்து நெல்லிக்குப்பம் அருகே உள்ள சொர்ணாவூர் தடுப்பணை, விசுவநாதபுரத்தில் உள்ள தடுப்பணை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுக்கப்படுவதாக கடலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.
நேற்று தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதையடுத்து கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் ஆற்று வெள்ள நீர் புகுந்தது. இந்த தண்ணீர் சுமார் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி தீவுபோல காணப்பட்டது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.