முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் மாணிக்கம், சித.பழனிச்சாமி ஆகியோர் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்  ஜே.பி. நட்டா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பூரில் மூன்று நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.   இதற்கிடையே, பாஜகவின் மாநில  செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் நிர்வாகிகள் சிலர்  பா.ஜ.க.வில் இணைந்தனர். 

குறிப்பாக  அ.தி.மு.க.வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் மற்றும் சித. பழனிசாமி ஆகியோர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

 

மேலும் சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜசேகர், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு தலைவர் பிரவீன்குமார், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பி.ஆர். துரைபாண்டி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் கடலூர் பாலமுருகன் ஆகியோரும் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து