முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்: சிறுவயதில் ஏற்பட்ட சம்பவம் குறித்து பிரபல நடிகை தகவல்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார். 

அதில்  தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார்.  மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 

பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது, 

அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம்  தான் டியூஷனுக்குச் சென்றனர். 

திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் (என் நண்பர்கள்) டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன். 

அப்போது ஆசிரியர்  என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்  புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து