முக்கிய செய்திகள்

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      சினிமா
Kamal 2021 11 24

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் கமல்ஹாசன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து