முக்கிய செய்திகள்

சூர்யாவை பாராட்டிய நல்லக்கண்ணு

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      சினிமா
Surya-Nallakannu 2021 11 26

Source: provided

சென்னை : கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் நல்லக்கண்ணு நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் பாராட்டினார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஜெய் பீம்’ படம் பார்த்துவிட்டு சினிமாதுறையினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என சூர்யாவுக்கு பல தரப்பினரும் பாராட்டி அறிக்கை வெளியிட்டும் வீடியோ வெளியிட்டும் ஆதரவாக இருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் என பலர் படம் பார்த்து விட்டு பாராட்டினர். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவும் நடிகர் சூர்யா, ஞானவேல் ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து