முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர்களுக்காக அறத்தின் வழியில் நின்று போராடியவர் பிரபாகரன்: சீமான்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      அரசியல்
Seeman 2021 09 21

Source: provided

சென்னை : பிரபாகரனின் 67-வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்குன்றத்தில் தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. இதில் சீமான் பங்கேற்று பேசியதாவது:- 

தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்கான விடுதலைப்போரின் தலைவன் என்றோ, இல்லை தமிழ்தேச விடுதலைக்கான போராட்டத்தின் தலைவன் என்று மட்டுமோ பார்க்கக் கூடாது. எமது எதிரிகள் சிங்கள மக்கள் அல்ல. எங்களை அடித்து ஒழிக்கும் சிங்கள ராணுவம் தான் என்று அவர் நம்பினார். இப்படி அறத்தின் வழி நின்று போரிட்டவர் எம் தலைவர்.

சாய்சஸ் எனும் புத்தகத்தில் சிவசங்கர மேனன் எழுதியிருக்கிறார் ‘பிரபாகரன், பொட்டம்மான் போன்ற தலைவர்களைப் பாதுகாத்து ஏதாவது ஒரு அரசியல் தீர்வினை எட்ட முற்பட்டபோது அன்று டெல்லியில் உள்ள அரசியல் தலைமையும் தமிழ் நாட்டு தலைமையும் அதனை விரும்பவில்லை. பிரபாகரனின் இருப்பு தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று நம்பினார்கள்.

அதனால் இந்த போரினை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினார்கள் என்று அவர் எழுதி இருக்கிறார். அதனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இவர்களுடைய அரசியல் வாழ்வை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து