முக்கிய செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை பட்டாளம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
CM-2 2021 11 27

Source: provided

சென்னை : சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

பட்டாளம் பகுதியில் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில்,  2 நாட்களாக விட்டுவிட்டு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமின்றி மழைநீர் தேங்காதவாறும், தேங்கக்கூடிய மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, சென்னையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் மாநகராட்சி எவ்வாறான பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து