முக்கிய செய்திகள்

கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட்: அக்சர் படேல் சுழற்பந்துவீச்சில் 296 ரன்களுக்கு சுருண்டது நியூசி.

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      விளையாட்டு
Kanpur-Test-cricket--2021 1

கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் அக்சர் படேல் சுழற்பந்துவீச்சில் 296 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி. 

345 ரன்கள்...

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

129 ரன்கள்...

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

டாம் லாதம்... 

இந்த நிலையில் நேற்று தொடங்கிய 3-ம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்களில் அக்சர் வேகத்தில் வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.

அக்சர் படேல்...

இறுதியில் நியூசிலாந்து அணி 142.3 ஓவர்களில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அக்சர் படேல் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து