முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணர்வுகள் – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாரதி, மோகமுள், பெரியார், ராமானுஜர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகியுள்ள படம் ஐந்து உணர்வுகள். எழுத்தாளர் ஆர். சூடாமணி எழுதிய 5 கதைகளின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டின் இடையில் என்ற கதையில் விடலைப் பருவத்தில் டீயுஷன் டீச்சர் மேல் ஏற்படும் காதல் பற்றியும், அம்மா பிடிவாதக்காரி கதையில் விதவைத்தாயின் அருகே புதிதாக திருமணமான மகன், மனைவியோடு சரசமாடுவதால் ஏற்படுகிற சங்கடத்தால் அவன் தாய் பெண்கள் விடுதிக்குச் செல்ல நேரிடுவது, பதில் பிறகு வரும் என்ற கதையில் வரதட்சணை தர இயலாததால்,  நிராகரிக்கப்பட்ட இளம் பெண்ணை 15 வருடங்களுக்கு பிறகு பார்த்த பிறகும் அதே பதிலைச் சொல்லும் ஒருவன்.  தனிமைத் தளிர் என்ற கதையில், தாம்பத்ய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை தன் பெற்றோரிடம் ஒப்படைக்கும் இரக்கமற்ற தம்பதி. களங்கம் இல்லை என்ற கதையில், பாலியல் வன்கொடுமைக்கு பலியான பெண் தனியாக வாழும் போது நிகழும் பிரச்சனைகள். ஆகிய ஐந்து கதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்த ஐந்து உணர்வுகள் படம்.  சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் அனைவரிடமும் சென்று சேர வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!