முக்கிய செய்திகள்

ஒமைக்ரான் பரவல் தீவிரம் எதிரொலி: வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த ஜப்பான்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      உலகம்
Japan 2021 11 29

Source: provided

டோக்கியோ : உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் கிருமி தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. 

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட பல அடுக்கு உருமாற்றம் பெற்றுள்ள புதிய வகை ஒமைக்ரான் கிருமி, பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் நுண்ணுயிரியின் ஆபத்தான தன்மை குறித்து தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட நாடுகள், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஒமைக்ரான் பரவி வரும் நாடுகள் உடனான போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் யாரும் நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு 30-ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதம் தொடக்கத்தில் திறக்கப்பட்ட எல்லைகள் இன்று இரவு முதல் மூடப்படும் என்று கிஷிடா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து