முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருச்சானூர் : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்க உள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்க உள்ளது. அதையொட்டி நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாக சாலையில் புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் காரியக்கர்மங்கள் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தனூர் லக்னத்தில் காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி வாகன மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.

இன்று இரவு சிறிய சேஷ வாகன சேவை, 1-ம் தேதி காலை பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 2-ந்தேதி காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு ஹனுமந்த வாகன சேவை, 4-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 5-ந்தேதி காலை சர்வ பூபால வாகன சேவை, மாலை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு கருட வாகன சேவை.

6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 7-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு குதிரை வாகன சேவை, 8-ந்தேதி வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!