முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல்: தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பாராளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், மதி.மு.க, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக விரோத செயல். இடைநீக்கம் தொடர்பான மாநிலங்களவை விதிகளுக்கு முரணாக 12 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். குளிர்கால கூட்ட தொடர் முழுமைக்கும் 12 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது முறையல்ல. முந்தைய கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுக்காக தற்போதைய கூட்ட தொடரில் தீர்மானம் கொண்டு வருவது துரதிஷ்டவசமானது. மாநிலங்களவையில் அரசு கொண்டு வந்த தீர்மானம் அவை அலுவல் விதிகளுக்கு விரோதமானது. இதுதொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சி குழு தலைவர்கள் இன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று இரு அவைகளிலும் 3 வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது தொடர்பான மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று பிற்பகல் மாநிலங்களை கூடியதுமே எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை மாநிலங்களவை துணை தலைவர் தெரிவித்தார். இது எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!