முக்கிய செய்திகள்

தொடர் வலியால் பங்கேற்காத சஹா - பி.சி.சி.ஐ விளக்கம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      விளையாட்டு
Saha 2021 11 29

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் சஹாவுக்குக் கழுத்தில் வலி ஏற்பட்டதால் அவரால் விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் சஹாவுக்குப் பதிலாக பரத் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த சஹா, அரை சதமெடுத்து இந்திய அணிக்குப் பெரிதும் உதவினார். நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் சில ஓவர்கள் மட்டுமே விக்கெட் கீப்பிங் பணிகளில் சஹா ஈடுபட்டார். பிறகு விக்கெட் கீப்பராக பரத் மீண்டும் செயல்பட்டார். 5-வது நாளான நேற்றும் பரத் தான் விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். 

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 2-வது இன்னிங்ஸில் சஹாவுக்குக் கழுத்தில் வலி ஏற்பட்டது. அதனால் விக்கெட் கீப்பிங் பணியில் நகர்வதில் அவருக்குப் பிரச்னை இருந்தது. சஹாவுக்குப் பதிலாக 5-ம் நாளில் பரத் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்று ட்விட்டரில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தமிழக வீரர் சிவராமகிருஷ்ணனின் டுவிட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி 

தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது. என் நிறத்தால் நான் விமர்சிக்கப்பட்டிருக்கிறேன் என் வாழ்க்கை முழுவதும் என் நிறத்தால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டு வேறுபாடு காட்டப்பட்டேன். இதைப்பற்றி ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக இதுபோன்ற நிகழ்வுகள் நம்முடைய சொந்த தேசத்திலேயே எனக்கு நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக நிறவெறி என்பது, மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவருகிறது. இங்கிலாந்தில் யார்க்ஸையர் கிரிக்கெட் கிளப்பில் தான் நிறைவெறியோடு பாகுபாடு காட்டப்பட்டேன் என ஆசிம் ரபிக் எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரத்தில் யார்க்ஸையர் கிளப் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து