முக்கிய செய்திகள்

விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது : அரசு அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தவிர்க்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. தொடர்ந்து தி.மு.க வழக்கறிஞர், முதல்வர் பதவியேற்ற போது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள் கூறுகையில், சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது. கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து