முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலம் ரூ. 5.81 கோடி வசூல்: செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலம் 25.10.2021 முதல் 28.11.2021 வரை முடிவடைந்த ஐந்து வார காலகட்டத்தில் ரூ. 5.81 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திடுவதில் வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது.  இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற புதிய பல முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன்படி 25.10.2021 முதல் 28.11.2021 வரை முடிவடைந்த ஐந்து வார காலகட்டத்தில் தமிழகத்தில்  உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 53055 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 66372 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற 1054 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி/ தண்டத்தொகையாக ரூ. 5.81 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.  அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து