முக்கிய செய்திகள்

'டாஸ்மாக்' செயல்படும் நேரம் மாற்றம்: நாளை முதல் இனி பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படும்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Mathu 2021 11 05

டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை செயல்பட்டுவந்த நிலையில் மீண்டும் பழைய நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகள் வருகின்ற 5ம் தேதி முதல் "பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி" வரை செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து