முக்கிய செய்திகள்

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் கோட்டைமுனி

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
RK-Suresh 2021 12 05

Source: provided

ட்ரீம் லைட்  பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் N. ஹபீப் மிகுந்த பொருட்ச் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி. புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். 1980 ல் இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ்கோடி பகுதிகளுக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக கோட்டைமுனி திரைப்படம் உருவாகிறது. இதில் கோட்டை  முனியாக R.K.சுரேஷ் நடிக்கிறார். அருந்ததி நாயர் நாயகியாக நடிக்க, திலீபன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஒளிப்பதிவு: ஏ.எம்.எம். கார்த்திகேயன்,  இசை: எம்.எஸ்.பாண்டியன், கலை: எஸ்.கே. படத்தொகுப்பு:  நெல்சன் ஆண்டனி,  நடனம்: சிவராக் சங்கர், பாடல்கள்: ப.கருப்பையா, சண்டைக்காட்சிகள்: டைகர் ஜான்மார்க், மக்கள் தொடர்பு: எஸ்.ப்ரியா, தயாரிப்பு நிர்வாகம்: கே.எஸ்.வெங்கடேஷ். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கோட்டைமுனி வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து