முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியில் 7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

சிலி நாட்டைச் சேர்ந்த பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்பு கூட்டில் 80 சதவீதத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை சமர்பித்துள்ளனர்.

சிலியில் சாண்டியாகோவிற்கு தெற்கே 3 ஆயிரம் தொலைவில் லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் செர்ரோ கீதோ எனும் பகுதி உள்ளது. இங்கு 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு பல்வேறு பாறைகள், புதைபடிவங்கள் உள்ளன. அகழ்வாராய்ச்சி தளமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கு அகழ்வாராய்ச்சியின் போது டைனோசரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அது குறித்த அறிக்கையை சிலி பல்கலைக் கழகத்தில் தற்போது விளக்கியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

 7.1 முதல் 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அந்த பகுதியில் வாழ்ந்ததாக மதிப்பிடுகின்றோம். 7 அடி நீளமும், 150 கிலோ எடையும் கொண்ட ஒரு தாவர உண்ணி இது. ஏற்கனவே அறியப்பட்ட டைனோசர் இனத்தை ஆராய்வதாக நம்பினோம்.ஆனால் அதன் வாலை ஆராய்ந்த போது தான் இது புதிய இனம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். இதன் வால் ஏழு ஜோடி ஆஸ்டியோடெர்ம்களால் (தோல் அடுக்குகளில் அமைந்துள்ள எலும்புத் தகடுகள்) மூடப்பட்டிருந்தது. பெரணி தாவரம் போன்ற அதன் மூலம் நமக்குத் தெரிந்த டைனோசர்களிலிருந்து மாறுபட்ட ஆயுதத்தை இது உருவாக்குகிறது என்று கூறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து