முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மரணம்: முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் சாரதா மேனம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன்  உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது,  சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சிறந்த மருத்துவ சேவைக்காக, தமிழக அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனனின் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து