முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரியில் நடக்கிறது?

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தலை 2022 பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. 

இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்படுகின்றன. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல், வரும் 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தேர்தல் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனையும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பானையை ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடவும் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2-கட்டமாக தேர்தலை நடத்தவும், தரம் உயர்த்தப்பட்ட  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையரை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து