எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரனுக்கு இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து உள்ளது. அ.தி.மு.க.வில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ளப்படுவர்களா என்ற கேள்விக்கே இடமில்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு வருவது நடக்காத காரியம்.
சென்னையில் ஜெயலலிதா நினைவு இடத்தில் அநாகரீகமான வகையில் நடந்து கொண்டனர். அ.தி.மு.க.வில் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்துக் கொண்டனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா நினைவு நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அ.ம.மு.க.வினர் ஈடுபட்டார்களா, அல்லது அவர்கள் போர்வையில் வேறு யாரும் ஈடுபட்டார்கள் என்பதை டி.டி.வி. தினகரன் தான் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


