முக்கிய செய்திகள்

விளம்பரப் பட ஷூட்டிங்கில் எம்.எஸ்.டோனி-யுவராஜ் திடீர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      விளையாட்டு
MS-Tony-Yuvraj-- 2021 12 07

விளம்பரப் பட ஷூட்டிங்கில் எம்.எஸ்.டோனி - யுவராஜ் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். 

திடீர் சந்திப்பு...

கிரிக்கெட் மைதானத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட எம் எஸ் டோனி-யுவராஜ் சிங் ஜோடியை இனி கிரிக்கெட் களத்தில்  காண்பது என்பது  சாத்தியமற்ற நிகழ்வு. ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளனர். ஒரு  விளம்பரப் பட ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர்.

ரசிகர்கள்...

அந்த வீடியோ பதிவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், டோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டோனியின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. 

முக்கியமானது...

 

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதன் காரணமாக, 2011 உலக கோப்பை தொடரில், அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில், இமாலய சிக்சர் அடித்து, இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை நனவாக்கிய கேப்டன் எம்.எஸ்.டோனி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து