முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய விருது பெற்ற தமிழக மாற்றுத்திறனாளிகள் 6 பேர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று டெல்லியில் மத்திய அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதியால் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது மற்றும் சிறந்த சான்றாளர் / முன்னுதாரண விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, அவ்விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று டெல்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், பார்வைதிறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற ஏ.எம். வேங்கடகிருஷ்ணன் மற்றும் எஸ். ஏழுமலை, அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற கே. தினேஷ், பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது பெற்ற மானகஷா தண்டபாணி, பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த சான்றாளர் / முன்னுதாரண விருது பெற்ற செல்வி கே. ஜோதி மற்றும் டி. பிரபாகரன் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், ஜனாதிபதியால் விருதுகளை வழங்கப் பெற்றனர்.  

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர். லால்வேனா ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து