முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் விவரம்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

நீலிகரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ராணுவ தளபதி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான எம்ஐ சீரிஸ் வகை ஹெலிகாப்டர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு

  1. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரஷ்யாவிடம் இருந்து எம்ஐ-17வி5 ரக 12 ஹெலிகாப்டர்களை கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆர்டர் செய்தது.
  2. இந்த ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஹெலிகாப்டரின் துணை நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸ் தயாரிக்கிறது.
  3. பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் வீரர்களை ஏற்றிச்செல்லும்வகையிலும் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. படைவீரர்களைக் கொண்டு செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல், தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் இதை பயன்படுத்த முடியும்
  4. எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்கள் நடுத்தர ரக அளவில்பொருட்களை சுமந்து செல்லும் திறன்கொண்டவை, எம்ஐ-8 ரக ஹெலிகாப்டரைச் சேர்ந்தவை. கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டது.
  5. விமானி அமரும் முன்பகுதி 12.5 மீட்டர் முதல் 23 மீட்டர் வரை அகலம், விசாலமானது. விரைவாக பொருட்களையும், ஆட்களையும் ஏற்றும் வகையில் பின்பற கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் உள்ளன
  6. 13 ஆயிரம் கிலோ அளவுக்கு எடுத்துக்கொண்டு பறக்கும் திறன்கொண்டது இந்த ரக ஹெலிகாப்டர். 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை.
  7. இந்த எம்ஐ-17வி-5 ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திரதுப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுடமுடியும் தாக்க முடியும்.
  8. எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம்.
  9. இந்த ஹெலிகாப்டரில் ஃபோம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். ஆதலால், ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். மேலும் ஜாமர் வசதிகள், இன்ப்றா ரெட் வசதிகள் உள்ளன.
  10. வி.கே-2500 டர்போ ரக எந்திரம் ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளதால், அதிகபட்சமா 2,100ஹெச்பி வேகத்தை வெளித்தள்ளும். இந்த எந்திரத்தை டிஜிட்டல் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
  11. இந்த ரக ஹெலிகாப்டர் மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும்.அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம்வரை பறக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து