எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவியும், மேலும் சில ராணுவ உயரதிகாரிகளும் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றோம்.
தலைமை தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த ராணு மூத்த அதிகாரிகளும் தேச பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய வீரர் பெருமக்கள், அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். விபத்தில் உயிரிழந்த தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தோரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025