முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கு :எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி முதல்வர் பணியாற்றி வருகிறார் ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கில், எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருவதாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து  இவ்வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமின் பெற்றார். இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றி வருகிறார். முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தமிழக அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்? என கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி உறுதிமொழியை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!