முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். கார் மீது காலணி வீசிய அ.ம.மு.க நிர்வாகி கைது

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      அரசியல்
EPS-Car 2021 12 06

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அ.ம.மு.க நிர்வாகி மாரிமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 5-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து