முக்கிய செய்திகள்

தீவிர சிகிச்சையில் இருக்கும் வருண் சிங் இஸ்ரோவின் 'ககன்யான்'திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Varun-Singh--2021-12-09

Source: provided

நீலகிரி : ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் இஸ்ரோவின் “ககன்யான்“ திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஆவர்.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் இஸ்ரோவின் “ககன்யான்“ திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஆவர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 3 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த திட்டத்திற்கான முதல் கட்ட பயிற்சியில் வருண் சிங் பங்கேற்றிருந்தார். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் நடந்த விபத்தில் வருண் சிங் மட்டுமே உயிர்தப்பினார். வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து