முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிபின் ராவத்தின் மறைவு பேரிழப்பு: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : விபத்தில் பலியான பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது பணியானது மகத்தானது என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, விபத்தில் பலியான பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது., இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவத்திற்காக பணியாற்றியபோது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். நானும் அவருடன் பிரதமர் அலுவலகத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தோ-திபெத் எல்லையில் சீன நாட்டின் ராணுவம் அத்துமீற முயன்றபோது பிபின் ராவத்தின் தீர்க்கமான முடிவுகள் பல நேரங்களில் சீனாவை பின்வாங்க செய்துள்ளது. இந்தியா சிறந்த ராணுவ வீரரை இழந்து விட்டது. அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது பணியானது மகத்தானது. எந்த காலத்திலும் மறக்க முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு, பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம், பதிவாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து