எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 2021-ம் ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள் என்ற தலைப்பில் கூகுள் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் 2021-ம் ஆண்டில் அதிகமாகத் தேடப்பட்டது கிரிக்கெட் விளையாட்டுதான். ஆம், அதிகமாகத் தேடப்பட்டதில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் டி20 போட்டிதான். அடுத்து ஐசிசி டி20 உலகக் கோப்பையாகும். கொரோனாவின் பிடியில் உலகமே இருந்தாலும், கொரோனா தடுப்பூசி, கோவின் போர்டல் போன்றவை அடுத்தடுத்த இடங்களில்தான் இருக்கின்றன.
அதிகமாகத் தேடப்பட்ட விளையாட்டுகளில் ஐபிஎல் முதலிடத்தையும், கோவின் போர்டல் இரண்டாவது இடத்தையும், 3-வதாக ஐசிசி டி20 உலகக் கோப்பை, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோவிட் தடுப்பூசி போன்றவை டாப் தேடுதல் பட்டியலில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டிலும் முதலிடத்தில் ஐபிஎல் டி20 இருந்த நிலையில், இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர்த்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ், பிளாக் ஃபங்கஸ் (கருப்புப் பூஞ்சை), ஆப்கானிஸ்தான், மே.வங்க தேர்தல், தட்கே புயல், லாக்டவுன் போன்றவையும் டாப்10 தேடுதல் பட்டியலில் உள்ளன. விளையாட்டுகள் வரிசையில் ஐபிஎல், டி20 உலகக் கோப்பைக்கு அடுத்து, யூரோ கோப்பை, கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அதிகமாக இந்தியர்களால் தேடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025