முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கரம்: எஸ்.டி.பி.ஐ. - பா.ஜ.க. நிர்வாகிகள் படுகொலை : ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்.டி.பி.ஐ) மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் மர்ம நபர்களாள் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த  கே.எஸ். ஷான் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொலை செய்து விட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. பைசி குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், பா.ஜ.க.வின் ஒ.பி.சி. மோர்ச்சா செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். கே.எஸ் ஷான் இறந்த 12 மணி நேரத்திற்குள்  பா.ஜ.க தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஷான் கொலைக்கு பழிக்கு பழியாக பா.ஜ.க. நிர்வாகி ரஞ்சித் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  அடுத்தடுத்த  கொலை சம்பவங்களால் கேரளாவின் ஆலப்புழாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பினராய் விஜயன் கூறுகையில், இத்தகைய கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் மாநிலத்திற்கு ஆபத்தானவை. இது போன்ற கொலைகாரக் குழுக்களையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து