முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருப்பதி மலைக்கு சென்றார்.  அவர் திருப்பதி மலையில் உள்ள வராக சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து