முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் மதுபோதையில் பஸ்சில் ரகளை செய்த இந்தியருக்கு சிறை

புதன்கிழமை, 29 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

சிங்கப்பூரில் மதுபோதையில் பஸ்சில் ரகளையில் ஈடுபட்டஇந்தியருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மூர்த்தி நாகப்பன். 65 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மதுபோதையில் பஸ்சில் ஏறினார். அப்போது அவர் முக கவசத்தை சரியாக அணியாமல் இருந்ததால் பஸ் டிரைவர் அவரிடம் முறையாக முக கவசம் அணியும்படி அறிவுறுத்தினார்.  இதனால் கோபமடைந்த மூர்த்தி நாகப்பன் பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளில் திட்டினார். சக பயணிகள் இதை தட்டிக் கேட்ட போது அவர்களையும் கொச்சையாக திட்டி தகராறில் ஈடுபட்டார். 

இது குறித்து பஸ் டிரைவர் அளித்த புகாரின் பேரில் மூர்த்தி நாகப்பனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூர்த்தி நாகப்பன் இதற்கு முன்னரும் 2 முறை இதே போல் மது போதையில் பஸ்சில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என்பதும், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்தது. 

இந்த நிலையில் மூர்த்தி நாகப்பன் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்தது. அப்போது மூர்த்தி நாகப்பன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து