முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஊட்டி : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த அக்டோபர் மாதம் 5 நாள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றார். ஊட்டி ராஜ்பவனில் தங்கி இருந்து பைக்காரா படகு இல்லம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பசுமையான தேயிலை தோட்டங்கள், அப்பர்பவானி அணை போன்றவற்றை தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். 

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (புதன்கிழமை) மாலையில் ஊட்டிக்கு வருகை தருகிறார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றி விட்டு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு வருகிறார். அவர் அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பின்னர் 7-ந் தேதி அவர் ஊட்டியில் இருந்து புறப்பட்டு கார் மூலம் கோவை சென்றடைகிறார்.

பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து