முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்க முறைகேடுகளுக்கு தி.மு.க.வும் பொறுப்பேற்க வேண்டும்: டுவிட்டரில் தினகரன் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

 கூட்டுறவு சங்க முறைகேடுகளுக்கு அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; தி.மு.க.வுக்கும் பொறுப்புண்டு என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நிதி மோசடிகள் நடைபெற்றதாக கூறி தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டு வந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60:40 பங்கீட்டில் தி.மு.க.வினர் சேர்ந்து கொண்டுதானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்?

அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய தி.மு.க. அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன? அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது. மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்து கொள்ளவதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.  இவ்வாறு அதில் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து