முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு தொடர்பாக இன்று ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து, சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார்.  இது குறித்து, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து