Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம் ரத்து பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த வாய்ப்பு?

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மதுரையில் பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதனால் ஜன.6 முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நடக்க இருந்த பொங்கல் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டு நடை பெறுமா என்பது குறித்து அரசு இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை. அதனால் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழா ஏற்பாடுகளை செய்து வரும் குழுவினர் ஆகியோர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று முன்தினம் நடக்க இருந்தது. இதில் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்தே இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது.,

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வந்த பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம் என்கிற முடிவில்தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில்தான் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பார்வையாளர்களுடன் ஜல்லிக் கட்டு நடத்துவதாக இருந்தால் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். தொற்று பரவி பாதிப்பு அதிகரித்தால் பார்வையாளர்கள் இல்லாமலே ஜல் லிக்கட்டு நடத்தவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து