எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகளை வாங்க உள்ளூர் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய வரிசையில் நின்று பெற்று சென்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ரூ. 300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 12 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்யும் வகையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரவு 10 மணி முதலே ராமச்சந்திர புஷ்கரணி, மாநகராட்சி அலுவலகம், பைராகி பட்டடி, விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 5 டிக்கெட் கவுண்டர் முன்பாக பக்தர்கள் குவிய தொடங்கினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
இதையடுத்து உடனடியாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் டிக்கெட்டுகளை வழங்கினர். பக்தர்கள் விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற்று சென்றனர். 8 மணி நேரத்தில் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும் காலியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025