முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் பாடலுக்கு நடனம் ஆடியதால் மணமகளை விவாகரத்து செய்த மணமகன்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஈராக்கில் பாடல் ஒன்றுக்கு மணமகள் நடனம் ஆடியதற்காக திருமணமான சில நாட்களிலேயே மணமகன் அவரை விவாகரத்து செய்தார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஆதிக்கம் நிறைந்த வரிகள் உடைய பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியதற்காக மணமகளை, மணமகன் விவாகரத்து செய்திருக்கிறார்.  விவாகரத்து செய்யும் அளவுக்கு அந்தப் பாடலில் என்ன உள்ளது என்று பார்த்தால், மிசீதரா என்ற சிரியா நாட்டின் பாடல்தான். இப்பாடலை லமிஸ் கான் பாடியுள்ளார். அப்பாடலில் நான் ஆதிக்கம் நிறைந்தவள். உன்னைக் கட்டுக்குள் வைப்பேன் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இப்பாடலுக்கு திருமணம் முடிந்த கையோடு நடனம் ஆடியதற்காகத்தான் மணமகள் மீது மணமகனும் அவரது குடும்பத்தினரும் கோபம் அடைந்துள்ளனர். மணமகளின் செயலின் மூலம் தங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் வந்து விட்டதாக மணமகள் வீட்டாரோடு வாக்குவாதம் செய்துள்ளனர்.  இறுதியில் மணப்பெண்ணை மணமகன் விவகரத்து செய்திருக்கிறார். ஈராக்கில் மிக விரைவாக வழங்கப்பட்ட விவாகரத்து வழக்காக இது பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து