முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 391 உதவி வேளாண்மை அலுவலர்,  உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  

உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை-உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை, உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக,  இத்துறைகளில் காலியாக உள்ள 161 உதவி வேளாண் அலுவலர் மற்றும் 230 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 உதவி வேளாண் அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், 5 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து