முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மட்டும்தான் 24 மணி நேரமும் 61 தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது., 

நீட் தேர்வு விலக்கு அவசியம் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கி கூறினார். நீட் பயிற்சி பள்ளிக்கல்வி மூலம் தொடர்ந்து வழங்கப்படும். தமிழகத்தில் 2-வது தடுப்பூசி போடாமல் 90 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் 24 மணி நேரமும் 61 தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன. 

தமிழகத்தில் மட்டும்தான் வீடுதேடி தடுப்பூசி திட்டம், ஊர்தேடி தடுப்பூசி திட்டம், வாரம் தோறும் மெகா சிறப்பு முகாம் போன்றவை நடத்தப்படுகிறது. 18 மெகா சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரையில் 3 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.  2-வது தவணை தடுப்பூசியை 50, 60 வயது உள்ளவர்கள் பெரும்பாலும் போடாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தடுப்பூசியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பூஸ்டர் தடுப்பூசி 60 ஆயிரத்து 51 பேருக்கு போடப்பட்டுள்ளது. போடாதவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அறிவிக்கப்படுகிறது. விரைவில் இலக்கை அடைவோம். 15 முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி 75 சதவீதம் போடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தகுதியுள்ள 35 லட்சம் பேரில் 23.5 லட்சம் போடப்பட்டுள்ளது. தற்போது 70 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து