முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை நிறுவப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது,  இந்நிலையில் பென்னி குயிக்கின் சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் சிலை நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவரது சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

எனவே கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் புதிய சிலையை அவரது சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மைய பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவன இங்கிலாந்து சட்டப்படி செயின் பீட்டர் தேவாலயத்தில் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில பொறியாளரான  ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து அரசு நிதிஉதவி செய்யாத நிலையிலும், இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்று எல்லாவிதமான தடைகளையும் தாண்டி முல்லைப்பெரியாறு அணையை 1895-ல் காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த அணையின் மூலம் அந்த 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முழுமையாக செழுமையடைந்து, மாற்றங்கள் அடைந்திருப்பதாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து