முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' நடிக்கும் படம் 'RAPO-19' என்ற டைட்டிலோடு  ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் லிங்குசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'மிருகம்' ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார். இந்த நிலையில்  'தி வாரியர்' என்று படத்துக்கு டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்' பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் இருவரும் மிகப் பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு,  என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையுடன் அதிரடி ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து