முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபுலேக்கில் சாலை பணிகளை நிறுத்த இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

லிபுலேக்கில் சாலை பணிகளை நிறுத்த இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்த நிலையில் மீண்டும் எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்தியா- நேபாள எல்லையில் லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி பகுதிகள் அமைந்துள்ளன. இந்த 3 இடங்களையும் நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன. இந்த நிலையில் லிபுலேக் பகுதியில் சாலை அமைப்பதற்காக இந்தியா சார்பில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை அமைக்கும் பணிகளை இந்தியா நிறுத்தவேண்டும் என்று நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் நியானேந்திர பகதூர் கார்கி கூறுகையில், ‘மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி ஆகியவை நேபாளத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். எனவே சாலை கட்டுமானப் பணிகளை இந்தியா நிறுத்தவேண்டும்’ என்றார். இந்த விவகாரம் காரணமாக இந்தியா- நேபாள எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து