முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: முதல்வர் புஷ்கர் கதிமா தொகுதியில் போட்டி

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்வர் புஷ்கர் கதிமா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.  இந்நிலையில் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் நேற்று 59 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

கடந்த 2017ல் நடந்த தேர்தலில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அதில் 10 எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாஜக மாநில தலைவர் மதன் கவுசிக் ஹரித்வார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமைச்சர்கள் சத்பால் மகராஜ், தான் சிங் ராவத் ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி பிரஹலாத் ஜோஷியும், பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங்கும் நம்பிக்கை தெரிவித்தனர். 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மாற்றாந்தாய் போக்கை எதிர்கொண்ட பிறகு, தற்போது பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டனர். குறிப்பாக, மாநிலத்தில்ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டன, சார் தாம் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது மற்றும் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலைகள் அமைக்க ரூ. 10,000 கோடி செலவிடப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து